Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

whirlpool நிறுவனம் Fxb India Suraksha தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பில் புதுவை அரசுடன் கைகோர்த்து அவசர உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் உதவிகள்

அக்டோபர் 13, 2021 02:32

புதுவை; கொரோன பாதிப்புள்ளனா இக்காலகட்டத்தில் திருபுவனையில் இயங்கி வரும் whirlpool நிறுவனம் Fxb India Suraksha தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பில் புதுவை அரசுடன் கைகோர்த்து அவசர உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் உதவிகள் , மக்கள் பாதுகாப்பு,

பொது மக்களிடையே கொரோன விழிப்புணர்வு, பதாகை, ஒலிபெருக்கிமூலம் தடுப்பூசி விழிப்புணர்வு, கிருமிநாசினி போன்ற பல்வேறு வகைகளில் பணியாற்றி வருகிறது

இதன் தொடர்ச்சியாக கொரோன இரண்டாம் அலை தீவிரம் அடைந்து அதிகமான பாதிப்புகளும் உயிர் இழப்புகளும் ஏற்பட்ட இந்நிலையில்.10லட்சம் மதிப்பீலான வேண்டிலேட்டார் மற்றும் ICU தேவைப்படும் படுக்கை உபகரணங்கள் whirlpool நிறுவனம் புதுவை அரசு சுகாதார துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக சுகாதாரத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கத்தில் திருபுவனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் தரத்தை மேலும் மேம்படுத்த திட்டமிட்டு சுமார் ரூ.20 லட்சம் செலவில் கட்டிட பராமரிப்பு,கழிவறை,மின் பராமரிப்பு,நுட்பமான உபகரணங்கள் போன்ற பல்வேறு வசதிகள் மேம்படுத்தும் பணி தொடக்கவிழா நிகழ்வு மாண்புமிகு துணைநிலை ஆளுநர் திருமதி.தமிழிசை சௌந்தராஜன் அவர்களின் தலைமையில் பூமிபூஜையுடன் நடைபெற்றது.

இன்நிகழ்வில் whirlpool இயக்குனர் திரு.ஹரிஹரன் அவர்கள் திருபுவனை சட்டமன்ற உறுப்பினர் திரு.அங்காளன்,சுகாதார செயலர் திரு. அருண், இயக்குனர் திரு.ஸ்ரீராமலு தேசிய சுகாதார இயக்கம், துணை இயக்குனர் பொதுசுகாதாரம் டாக்டர் முரளி துணை இயக்குனர் IEC டாக்டர் திரு.ராகுநாதன் எப் எக்ஸ் பி(FXB) திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.யுவராஜ், தலைமை மருத்துவ அதிகாரி விக்னேஷ்வரன் மற்றும் மருத்துவ அதிகாரி ஐஸ்வர்யா திருபுவனை ஆகியோர் கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்