Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சந்திரயான்-2 செயற்கைக்கோள் வரும் ஜூலையில் விண்ணில் செலுத்தப்படும் : இஸ்ரோ

மே 02, 2019 05:20

ஸ்ரீஹரிகோட்டா: இந்தியா முதன்முறையாக நிலவிற்கு சந்திராயன்-I விண்கலத்தை 2008-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ஆம் தேதி அனுப்பியது. இந்த விண்கலம் நிலவின் தரைபகுதியிலிருந்து 100-கிலோமீட்டர் உயரத்தில் சுற்றி வந்தது. இந்த விண்கலம் நிலவிலுள்ள சூழல்கள், கனிமங்கள் குறித்து ஆய்வு செய்தது. இதனையடுத்து சந்திராயன்-I விண்கலம் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதன் ஆயுள் காலத்தை நிறைவு செய்தது. அதன்பின்னர் இந்தியா மீண்டும் நிலவிற்கு சந்திராயன்-II விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டது

இதன்படி, சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்த முதலில் திட்டமிடப்பட்ட போது, சோதனைகள் இறுதி செய்யப்படாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் நேற்று இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சந்திராயன் -2 திட்டம் இந்திய விண்வெளி ஆய்வுத்துறையின் முக்கியமான திட்டமாகும் என்பதால் மிகவும் எச்சரிக்கையாக விண்ணில் செலுத்த உள்ளோம். 

சந்திரயான்-2 செயற்கைக்கோள் வரும் ஜூலை 9 - 16க்கு இடைப்பட்ட நாட்களில் விண்ணில் செலுத்தப்படும்.   ரூ.800 கோடி மதிப்பு மிக்க இந்த விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி எம்.கே III ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.  சந்திரயான்  செப்டம்பர் 6-ம் தேதி நிலவில் தரையிரங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்