Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும்

அக்டோபர் 14, 2021 11:09

கோவை நீலகிரி உட்பட 20க்கும் மேற்பட்ட தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மிக கனமழை, கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

 

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, பல மாவட்டங்களில் வரும் 17ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கன மழை பெய்யும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், சேலம், ஈரோடு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் கன மழை பெய்யும்.நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை மிக கன மழை பெய்யும்.

 

நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் நாளை மறுதினம் மிக கன மழை பெய்யும். கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில், இடி, மின்னலுடன் கன மழை பெய்யும்.வரும் 17ம் தேதி, சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

 

மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை ஆந்திரா - ஒடிசா நோக்கி செல்லும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

 

தலைப்புச்செய்திகள்