Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆயுதபூஜை கொண்டாட்டம்; தேனியில் பூக்களின் விலை உயர்வு

அக்டோபர் 14, 2021 12:07

தேனி : ஆயுதபூஜை, விஜயதசமி கொண்டாட்டத்தால் தேனி மார்க்கெட்டில் பூக்களின் விலை பலமடங்கு உயர்ந்தன.இன்று ஆயுத பூஜையும், நாளை விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது

இதையொட்டி தேனி பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க மக்கள் குவிந்தனர். பூக்கள் விலை உயர்ந்தன. 2 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.300க்கு விற்ற கனகாம்பரம் நேற்று ரூ.1000க்கு விற்றது.

மல்லிகை கிலோ ரூ.300ல் இருந்து ரூ. 800க்கும், ஜாதிப்பூ ரூ. 150ல் இருந்து 400க்கும், முல்லைபூ ரூ.200ல் இருந்து ரூ.600க்கும், அரளிப்பூ ரூ.100ல் இருந்து ரூ.400க்கும், செண்டுப்பூ ரூ.40ல் இருந்து ரூ.120க்கும், ஜம்பங்கி ரூ.80ல் இருந்து ரூ.200க்கும் எகிறியது.மரிக்கொழுந்து கிலோ ரூ.30ல் இருந்து ரூ.80க்கும், பட்டன் ரோஸ் ரூ.150ல் இருந்த ரூ.300க்கும், சாதா ரோஸ் ரூ.40ல் இருந்து ரூ.120க்கும், கோழிப்பூ ரூ.20ல் இருந்து ரூ.60க்கும், துரசி ரூ.15ல் இருந்து ரூ.50க்கும் விற்பனையானது.இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சிஅடைந்தனர்.

தலைப்புச்செய்திகள்