Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தென்குடி அங்காளம்மன் ஆலயத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி.

அக்டோபர் 16, 2021 10:59

திருவாரூர் ; நன்னிலம் அருகே உள்ள தென்குடி ஸ்ரீ அங்காள அம்மன் ஆலயத்தில்  ஶ்ரீ  அங்காளம்மன் சக்தி பீடம் சேவா டிரஸ்ட் சார்பில் நவராத்திரி விழா நிறைவு மற்றும் விஜயதசமியை முன்னிட்டு வித்யரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் முடிகொண்டான் அருகே உள்ள தென்குடி ஶ்ரீ அங்காளம்மன் ஆலயத்தில் நவராத்ரியை முன்னிட்டு கொலு வைத்து தினசரி வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரசாதம் படைக்கப்பட்டு அப்பகுதி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. 

இந்நிலையில் நவராத்திரி கொலுவின் நிறைவு நாள் மற்றும் விஜயதசமியை முன்னிட்டு ஸ்ரீ அங்காளம்மன் சேவா டிரஸ்ட் சார்பில் புதிதாக பள்ளியில் சேர இருக்கும் மாணவர்களுக்காக வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் நெல்மணிகளை பரப்பி குழந்தைகளை தமிழ் உயிர் எழுத்தின் முதலெழுத்தை எழுத வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக சரஸ்வதி தேவியின் அருள் வேண்டி சரஸ்வதி மூல மந்திரத்தை நிகழ்விற்கு வந்திருந்த மாணவ மாணவிகள் 18 முறை கூறினர். 

அதனை தொடர்ந்து  அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா உள்ளிட்ட பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.புதிதாக பள்ளி செல்லவிருக்கும் குழந்தைகளுக்கு சிலேட்டு, புத்தகம் போன்றவை வழங்கப்பட்டது.\

இதில் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இறுதியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ அங்காளம்மன் சக்தி பீடம் சேவா டிரஸ்ட் நிறுவனரும்,தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை திருவாரூர் மாவட்ட அமைப்பாளருமான அப்பு வர்மா,அவரது துணைவியார் காயத்ரி அப்பு வர்மா மற்றும் தென்குடி அன்னதான கமிட்டி குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்