Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரஸ் தலைவர் யார்?

அக்டோபர் 16, 2021 11:29

புதுடெல்லி; ராகுல் காந்தி காங்கிரஸ்  கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிறகு , கட்சியின் இடைக்கால தலைவர் பொறுப்பை சோனியா காந்தி வகித்து வருகிறார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடுகிறது. காணொலி வாயிலாக இந்தக் கூட்டம் கூட உள்ளது.

இந்தக் கூட்டத்தில் அடுத்த தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து இன்று முக்கிய முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது. மேலும் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்