Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.18 லட்சம் மோசடி - கூட்டுறவு சங்க தலைவர் கைது

அக்டோபர் 16, 2021 06:33

 

ராமநாதபுரம்: திருவாடானை அருகே உள்ளது சேந்தமங்கலம். இங்குள்ள திருத்தேர்வளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஓடக்கரையை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவர் செயலாளராகவும், ஆர்.எஸ்.மங்கலம் கப்பகுடி தங்கவேல் (வயது 67) என்பவர் தலைவராகவும் இருந்து வந்துள்ளனர்.

இதில் செயலாளர் ஆசைத்தம்பி கடந்த 2019-20 காலகட்டத்தில் சங்கத்தில் வசூல் செய்த தொகையினை மத்திய கூட்டுறவு வங்கியில் செலுத்தாமல் ரூ.16 லட்சத்து 83 ஆயிரத்து 318 கையாடல் செய்துள்ளார்.

மேலும், 2 உறுப்பினர்களுக்கு ரூ.1 லட்சம் பயிர்கடன் வழங்கியதாக போலி கையெழுத்திட்டு மோசடி செய்துள்ளாராம்.

உரம் இருப்பினை ஒப்படைக்காமல் ரூ.6 ஆயிரமும், நகை மதிப்பீட்டாளர் பணிபுரியாத நாட்களுக்கு போலி கணக்கு எழுதி ரூ.24 ஆயிரத்து 500-ம் கையாடல் செய்ததாக. கூறப்படுகிறது இதுதவிர, பல்வேறு மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு மொத்தம் ரூ.18 லட்சத்து 14 ஆயிரத்து 818 மோசடி செய்துள்ளாராம்.

இதற்கு சங்க தலைவரான தங்கவேல் உடந்தையாக இருந்து வந்துள்ளாராம். இந்த மோசடி ஆய்வுக்குழுவினரின் சங்க கணக்கு விவரங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக கூட்டுறவு துணை பதிவாளர் கோவிந்தராஜன் ராமநாதபுரம் வணிகவியல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குபதிவு செய்து சங்க தலைவர் தங்கவேலை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள செயலாளர் ஆசைத்தம்பியை தேடிவருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்