Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கனமழை தொடர்பாக 5 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

அக்டோபர் 17, 2021 06:11

சென்னை: தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய ஆயத்தப்பணிகள் குறித்து 5 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஓரிரு நாட்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழையும், மிக கனமழையும் பெய்து வருகிறது.

இந்தநிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் பல கட்டங்களாக ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத்துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்படும் இடங்களில் முகாம்கள் மற்றும் உணவு, தண்ணீர், மருத்துவம் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரித்தப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில், தலைமை செயலகத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின்,  தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய ஆயத்தப்பணிகள் குறித்து கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, நீலகிரி, நாமக்கல் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும், ஆலோசனை கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, பொதுத்துறை செயலாளர் ஜகநாதன் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அப்போது, கனமழையை ஒட்டி 5 மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

மேலும், கனமழையால் மக்கள் பாதிக்காத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அனைத்து சேவைகளும் உடனுக்குடன் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என அறிவுறுத்தினார்.

தலைப்புச்செய்திகள்