Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவையில் அதிகரிக்கும் போலி பத்திரிகையாளர்  அடையாள அட்டைகள்

அக்டோபர் 20, 2021 03:45

கோவை: தமிழகத்தில் தற்போது போலி பத்திரிகையாளர் அடையாள அட்டைகள் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுவும் கோவை மாவட்டத்தில் இப்படி போலியான அடையாள அட்டைகள், வாகன ஸ்டிக்கர்களை அதிகமானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

சமீபத்தில் ஒரு குறிப்பிட ஒரு நிறுவனத்தில், அந்த நிறுவனத்திற்கு தெரியாமலேயே சுமார் 10க்கும் மேற்பட்ட போலியான அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தி வந்துள்ளனர். அதோடு அந்த நிறுவனத்தின் பெயரில் வாகன ஸ்டிக்கரும் பயன்படுத்தியுள்ளனர். அதை தற்போது ஆதாரத்தோடு கண்டுபிடித்துள்ளது அந்த பத்திரிகை நிறுவனம்.

இதுபோன்ற போலியான பத்திரிகையாளர் அடையாள அட்டைகள், வாகன ஸ்டிக்கர்கள் தயாரித்துக் கொடுக்க சிலர் ஏஜெண்டுகள் போல் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. எனவே கோவை மாவட்ட ஆட்சியர், கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள், பத்திரிகையாளர் அடையாள அட்டைகள் பயன்படுத்துவர்களிடம் அவர்கள் பத்திகையாளரா அல்லது போலி பத்திரிகையாளரா என்பது குறித்து விசாரித்து, போலியானவராக இருந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அப்போதுதான் போலியான அடையாள அட்டைகளின் மூலம் குற்றச்செயல்களில் ஈடுபடும் போலி பத்திரிகையாளர்களை அப்புறப்படுத்த முடியும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

தலைப்புச்செய்திகள்