Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திரிபுராவில் முஸ்லிம்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பட்டம்

நவம்பர் 06, 2021 12:56

தாம்பரம்: திரிபுராவில் முஸ்லிம்கள் தாக்கப்படுவதை கண்டித்து செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாநில துனை பொதுசெயளாலர் யாக்கூப் தலைமையில் 500 க்கும் மேற்ப்பட்டோர் தாமபர்ம் சண்முக சாலையில் இருந்து பேரணியாக வந்து பேருந்து நிலையத்தில் ஆர்ப்பட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அதில் திரிபுராவில் முஸ்லீன்களை படுகொலை செய்யும் பாஜக அரசையும்,துனைபோகும் ஒன்றிய அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் 100க்கும் மேற்ப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் கலந்துகொண்டு பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில பொதுசெயலாளரும்,சட்டமன்ற உறுபினருமான அப்துல் சமது கலந்துகொண்டு கண்டன உறையாற்றினர்.
இதில் மாவட்ட தலைவர் ஜாஹிர் உசேன் மற்றும் விசிக மாவட்ட செயலாளர் தேவ அருள்பிரகாசம், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சலீம் அச்சரப்பாக்கம் ஷாஜகான் மற்றும் பெண்கள் என பலர் கலந்து கொண்டனர். 

தலைப்புச்செய்திகள்