Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னைக்கான ரெட் அலர்ட் வாபஸ்

நவம்பர் 08, 2021 04:56

 சென்னை: சென்னையில் வரலாறு காணாத வகையில் ஒரே நாள் இரவில் பலத்த மழை கொட்டியது. இதனால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரிக்கு மிக கனமழைக்கான ‘ரெட்’ அலர்ட் கொடுக்கப்பட்டு இருந்தது. இதனால் வெள்ள தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலையில் இருந்து சென்னையில் மழை பெய்யவில்லை. ஆனாலும் வானம் இருண்டு காணப்பட்டது. எந்நேரமும் மழை பெய்யலாம் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் வெளியே வராமல் வீடுகளில் முடங்கி இருந்தார்கள்.

இதற்கிடையில் சென்னைக்கு எச்சரிக்கப்பட்ட ‘ரெட்’ அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:- வளி மண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதிகளில் பரவி வருகிறது. நாளை புதிதாத காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவாகிறது. இதனால் தென் தமிழகம், வட தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னைக்கு வழங்கப்பட்ட ‘ரெட்’ அலர்ட் வாபஸ் பெறப்படுகிறது. 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்