Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போதைப் பொருள் வழக்கில் ஷாருக்கான் பெண் மேலாளருக்கு சம்மன்

நவம்பர் 09, 2021 10:42

மும்பை: சொகுசு கப்பலில் போதைப் பொருள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், போதைப் பொருள் உட்கொண்டதுடன் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அவரை அதிரடியாக கைது செய்தனர். ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தலைமை ஏற்று நடத்தியவர் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே. 

இரண்டு வாரங்கள் ஜெயிலில் அடைக்கப்பட்ட நிலையில், மும்பை ஐகோர்ட் ஜாமீன் வழங்கிய நிலையில் தற்போது வெளியில் உள்ளார். போதைப் பொருள் வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதில் ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானியிடம் பேரம் பேசியவர்கள் தொழிலதிபர் சாம் டிசோசா மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் சாட்சி கிரன் கோசவி என கூறப்படுகிறது.

இந்நிலையில், போதைப் பொருள் வழக்கில் ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானிக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் விஜிலென்ஸ் குழுவினால் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் (என்சிபி) சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் (எஸ்ஐடி) பூஜா தத்லானி ஆஜராக கூடுதல் அவகாசம் கேட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்