Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரோனா பாதிப்பால் உயிரிழந்த 36,220 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

நவம்பர் 10, 2021 11:28

சென்னை: கரோனா பாதிப்பால் உயிரிழந்த 36,220 பேரின் குடும்பங்களுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தலா ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி விஜயகோபால் என்பவரும், கரோனாவால் உயிரிழந்த வழக்கறிஞர்கள் மற்றும் குமாஸ்தாக்க ளுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி வழக்கறிஞர் பி.ஸ்டாலின் உள்ளிட்டோரும் தொடர்ந்த வழக்கு நேற்று உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், “உச்ச நீதிமன்ற உத்தர வுப்படி இழப்பீடு வழங்குவது தொடர்பாக வகுக்கப்பட்ட விதி களின்படி உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாநில அரசு எவ்வளவு இழப்பீடு வழங்க உள்ளது எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், “உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் கரோனா பாதிப்பால் இறந்த 36,220 பேரின் குடும்பங் களுக்கு குறைந்தபட்ச மாக தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்” என்றார்.

அதையடுத்து பிற மாநிலங்க ளில் கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், “கரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு முதலில் நிர்ணயித்துள்ள இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும். அதன்பிறகு கூடுதலாக இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுமா என்பது குறித்து அடுத்த வாரம் தெரிவிக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர். மேலும் ரூ.50 ஆயிரம் இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்க தமிழக மற்றும் புதுச்சேரி அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என அறிவுறுத் தியுள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்