Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

6 மாதம் கழித்து ‘பூஸ்டர்’ தடுப்பூசி போடுவது நல்லது

நவம்பர் 11, 2021 10:55

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக 3-வது ‘டோஸ்’ தடுப்பூசியை (பூஸ்டர் டோஸ்) இதுவரை யாருக்கும் போடவில்லை. இந்த நிலையில் கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கி வழங்கி வருகிற பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ண எல்லா, டி.வி. சேனல் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் பேசுகையில் கூறியதாவது:-

கொரோனாவுக்கு எதிராக 2-வது ‘டோஸ்’ தடுப்பூசி போட்டு 6 மாதங்களான பின்னர் பூஸ்டர் தடுப்பூசி போடுவது சிறந்தது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை பொறுத்தமட்டில், கோவேக்சினை காட்டிலும் நாசி வழியே செலுத்தக்கூடியது நலமாக இருக்கும் என்று கருதுகிறோம்.

ஒட்டுமொத்த உலகமும் நாசி வழியாக செலுத்தக்கூடிய தடுப்பூசிக்காக காத்திருக்கிறது. இது பரவலை தடுக்கும் ஒரே வழியாகும். நாங்கள் நாசி வழியே செலுத்தும் தடுப்பூசியை கொண்டு வருகிறோம். கோவேக்சினை முதல் டோசாக தந்து விட்டு, இரண்டாவது டோசாக நாசி வழியாக செலுத்துகிற தடுப்பூசியை தருவது குறித்து சிந்திக்கிறோம்.

கொரோனா பாதித்தவர்களுக்கு அல்லது ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இது நன்றாக வேலை செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்