Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரோனா தடுப்பூசிக்குப் பதிலாக மாத்திரை: இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் மாத்திரைக்கு மத்தியஅரசு விரைவில் அனுமதி

நவம்பர் 11, 2021 11:44

கரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவிலேேய தயாரிக்கப்பட்ட இரு தடுப்பூசிகள் நடைமுறையில் இருக்கும் நிலையில் விரைவில் கரோனாவுக்கு எதிராக மாத்திரைக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கும் எனத் தெரிகிறது. மெர்க் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள மோல்னுபிராவிர் எனும் ஆன்ட்டிவைரல் மாத்திரைக்கு விரைவில் மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று சிஎஸ்ஐர் அமைப்பின் கரோனா கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் மருத்துவர் ராம் விஸ்வகர்மா தனியார் சேனல் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

லேசான மற்றும் மிதான கரோனா தொற்றுக்கு மோல்னுபிராவிர் மாத்திரைகளை வழங்கலாம், கரோனா தொற்று ஒருவருக்கு வீரியமடையக் கூடும், மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட வாய்ப்புள்ளவர்கள் எனக் கருதப்படுபவர்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொண்டால் பாதிப்பிலிருந்து மீள முடியும். இது தவிர பைஸர் நிறுவனம், பேக்ஸ்லோவிட் ஆகிய இரு நிறுவனங்களும் கரோனா வைரஸுக்கு எதிராக மாத்திரையை கண்டுபிடித்து மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறார்கள்.

தனியார் சேனல் நிகழ்ச்சியில் சிஎஸ்ஐர் அமைப்பின் கரோனா கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் மருத்துவர் ராம் விஸ்வகர்மா பேசுகையில் “கரோனா பெருந்தொற்றின் முடிவில் இருக்கிறோம். இந்தசூழலில் தடுப்பூசி்்க்கு அடுத்தார்போல் மாத்திரைகள் வருவது நல்ல முன்னேற்றம்.

இந்த மாத்திரைகள் புழக்கத்துக்கு வரும்போது, கரோனா வைரஸ் முற்றிலுமாக அழியலாம். மால்னுபிராவிர் மாத்திரைகளை இந்தியாவில் தயாரிப்பது குறித்து மெர்க் நிறுவனம் இந்தியாவில் 5 நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருகிறது. இந்த மாத்திரைக்கு எந்த நாளிலும் மத்திய அரசு சார்பில் அனுமதி வழங்கப்படலாம் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

பைஸர், பேக்ஸ்லோவிட் நிறுவனங்கள் தயாரித்து வரும் மாத்திரைகள் குறித்த பரிசோதனை முடிவுகளின்படி, 89 சதவீதம் மருத்துவமனைஅனுமதி, உயிரிழப்பை தடுப்பதாகத் தெரியவந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்