Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

293 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வழக்கமான பெயர்களில் இயக்கம்- தெற்கு ரெயில்வே தகவல்

நவம்பர் 14, 2021 10:26

சென்னை: நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கிய போது ரெயில், விமானம் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. பின்னர் தொற்று குறைந்து வந்ததால், படிப்படியாக போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டது. அந்தவகையில், தெற்கு ரெயில்வே சார்பில் இயக்கப்பட்ட அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும், சிறப்பு ரெயில்களாகவே இயக்கப்பட்டது.

இந்தநிலையில், தற்போது, சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டு வந்த அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும், மீண்டும் வழக்கமான பெயர்களில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, அனைத்து சிறப்பு ரெயில்களும், நடப்பு கால அட்டவணைப்படியே வழக்கமான பெயர்களில், வழக்கமான ரெயில் வண்டி எண்களில், தற்போதையை வழிகாட்டுதல்படி மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. 

அந்தவகையில், கொரோனா காலத்தில் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்ட, பாண்டியன் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், செந்தூர் எக்ஸ்பிரஸ், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தெற்கு ரெயில்வேயில் இயங்கும் 293 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் வழக்கமான பெயர்களில் இன்று முதல் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்