Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கனடாவில் இருந்து 108 ஆண்டுக்கு பிறகு மீட்கப்பட்ட அன்னபூர்ணா சிலை

நவம்பர் 16, 2021 11:03

வாரணாசி : உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் பெண் கடவுள் அன்னபூர்ணா சிலை இருந்தது. இது, 18-ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான சிலை ஆகும். ஆனால், 108 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிலை திருடப்பட்டது. அதை கொள்ளையர்கள் கனடாவுக்கு கடத்திச் சென்றனர். சட்ட போராட்டம் மூலம் அது 108 ஆண்டுகளுக்கு பிறகு மீட்டு வரப்பட்டுள்ளது.

அந்த சிலையை மீண்டும் நிறுவும் பணி, காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று நடந்தது. இதற்காக 2 நாள் பயணமாக, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், நேற்று முன்தினம் வாரணாசிக்கு வந்தார். வெள்ளி பல்லக்கில் சிலையை வைத்து கோவிலுக்கு கொண்டு வந்தார்.

கோவிலின் வடகிழக்கு மூலையில், அன்னபூர்ணா கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அங்கு அன்னபூர்ணா சிலையை வைத்து யோகி ஆதித்யநாத் சிறப்பு பூஜைகள் செய்தார். வேத மந்திரங்கள் முழங்க சிலை நிறுவப்பட்டது. மேலும், கோவிலின் மறுசீரமைப்பு பணிக்காக அப்புறப்படுத்தப்பட்ட வேறு 5 சாமி சிலைகளும் மீண்டும் வைக்கப்பட்டன.
 

தலைப்புச்செய்திகள்