Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நடைமேம்பாலம் திறக்கப்படாததால் உடுமலையில் விபத்தில் சிக்கும் பொதுமக்கள்

நவம்பர் 16, 2021 12:45

உடுமலை: உடுமலை பஸ் நிலையம் அருகே பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. பஸ் நிலையத்தில் இருந்து பொதுமக்கள், அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல சாலையை கடக்க வேண்டிய சூழல் உள்ளது.

நூற்றுக்கணக்கான மக்கள் சாலையை கடக்கும் போது வாகன போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில்2 ஆண்டுக்கு முன் பஸ்  நிலையம் அருகே ரூ.1.50 கோடி செலவில் ‘லிப்ட்’ உடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டது. 

ஆனால் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் வீணாக உள்ளது. பாலம் மற்றும் பாலத்தின் கீழ் பகுதி வாகன நிறுத்துமிடங்கள், போதை ஆசாமிகளின் புகலிடமாக மாறியுள்ளது. பொதுமக்கள் வழக்கம் போல் சாலையை கடக்கும் போது விபத்து, வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 

2 ஆண்டாக திறக்கப்படாமல் உள்ளதால் பொருத்தப்பட்ட லிப்ட், எந்திரங்கள், மின் விளக்குகள் வீணாகி வருவதோடு பராமரிப்பு இல்லாமல் பாலம் பழுதடைந்து அரசு நிதியும் வீணடிக்கப்பட்டு வருகிறது. எனவே இப்பாலத்தை திறக்க நகராட்சி மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்