Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பானி புயல் முன்னெச்சரிக்கை: ஒடிசாவில் 10 லட்சம் பேர் வெளியேற்றம்

மே 02, 2019 10:26

பானி புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில், ஒடிசாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

புவனேஸ்வரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த  வானிலை ஆய்வு மைய இயக்குநர் புஸ்வாஸ் கூறியதாவது:-

பானி புயல் காரணமாக ஒடிசாவின் 11 கடற்கரையோர மாவட்டங்களில் மிக அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், கடற்கரையோர மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

இந்த புயல் காரணமாக 20 சென்டி மீட்டர் மழை பொழிவு இருக்கும். ஒடிசாவின் ஆண்டு மழை அளவில் 10 சதவீதம் அளவுக்கு இந்த மழை இருக்கும். நாளை மாலை 5.30 மணி அளவில் புயல் கரையை கடக்கும். அப்போது அதிகபட்சமாக மணிக்கு 205 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசக்கூடும் . கடல் அலைகள் ஊருக்குள் நுழைய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்தார்.

இதனிடையே, ஒடிசாவில் பதிவான வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தலைப்புச்செய்திகள்