Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை

நவம்பர் 26, 2021 01:01

ஸ்ரீநகர்: இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்று சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் காஷ்மீர் மாநிலத்துக்குள் தொடர்ந்து ஊடுருவி வருகிறார்கள்.

அங்குள்ள பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் ஊடுருவிய பயங்கவாதிகள், 9 பாதுகாப்பு படையினரை சுட்டுக் கொன்றனர்.

இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு பூஞ்ச் மாவட்டம் பிம்பர்காலி என்ற இடத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவுவதாக தெரிய வந்தது. உடனே அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.

அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதி ஒருவனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினார்கள். அந்த பகுதியில் மேலும் பல பயங்கரவாதிகள் ஊடுருவி பதுங்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

தலைப்புச்செய்திகள்