Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உள்ளாட்சி தேர்தல்; தாராபுரத்தில் எஸ்.டி.பி.ஐ., வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

நவம்பர் 27, 2021 09:36

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வருகின்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு தாராபுரம் நகர்ப்பகுதிகளில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் முகமது முஸ்தபா தலைமையில், ஜின்னா மைதானத்தில் நடைபெற்றன.

இக்கூட்டத்தில் செய்தியாளர்களிடம் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஹரிஷ் பாபு கூறுகையில், வருகின்ற தேர்தலில் தாராபுரம் நகராட்சி உட்பட்ட பகுதிகளுக்கு நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் முதல் கட்ட அறிமுக நடைபெற்று வருவதாகவும், தாராபுரம் பகுதிகளில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு  பல்வேறு மக்கள் நல பணிகள் செய்து வருவதாகவும், இதனடிப்படையில் கடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு அனைத்து வார்டுகளிலும் தேர்தலில் வாக்குறுதி அளித்த அதை செய்ய தவறிய அரசுக்கும், அரசு மன்றங்களுக்கும் அவ்வப்போது சுட்டிக் காட்டும் வகையிலும் தாராபுரம் பகுதியில் பல்வேறு போராட்டங்களை கட்சியின் சார்பில் நடத்தப்பட்டு வருவதாகவும், மேலும் ஒரு சில தினங்களுக்கு முன்பாக அங்கன்வாடி, ரேஷன் கடை, சாக்கடை வசதி மற்றும் சாலை வசதியை மேம்படுத்த உள்ளாட்சி மன்ற பணிகளை மக்களுக்காக  செய்து வரக்கூடிய எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர்ளை அங்கீகரிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இதில் தெற்கு மாவட்ட செயலாளர் அப்துல் ஹக்கீம், தாராபுரம் தொகுதி செயற்குழு உறுப்பினர் ஜாபர் அலி, தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது இஸ்மாயில்,தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சையது அபுதாஹிர்,மாவட்ட செயலாளர் முகமது ரபிக், நகர தலைவர் சிக்கந்தர் பாஷா, தெற்கு மாவட்ட தலைவர் ஆர் எஸ் பாபு, மற்றும் தொகுதி இணை செயலாளர் சம்சுதீன்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்  24.11.21 வியாழக்கிழமை அன்று பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர் கரூர் திருச்சி திண்டுக்கல் ஈரோடு,கோவை  மாவட்டங்களை சேர்ந்த  விவசாயிகள்  78 நபர்கள் பருத்தி கொண்டு வந்திருந்தனர். பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர் திண்டுக்கல் ஈரோடு,சேலம் கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். 

வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூபாய்.8828 ற்கும் குறைந்த பட்ச விலை ரூபாய்.6150ற்கும் சராசரி விலை ரூ 7350 ற்கும் விற்பனையானது.. பருத்தியின்  மொத்த அளவ 317 மூட்டைகள்  குவிண்டால் 108.17மதிப்பு ரூபாய்  769330/- ஏலத்தில் 8 வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர் என முதுநிலை செயலாளர் திருப்பூர் விற்பனைக்குழு ஆர்.பாலசந்திரன் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

தலைப்புச்செய்திகள்