Sunday, 23rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: சிதம்பரம், கார்த்தி ஆஜராக சம்மன்

நவம்பர் 28, 2021 11:01

புதுடெல்லி: ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனத்திற்கு முறைகேடாக அனுமதி வழங்கிய வழக்கு, டெல்லி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அவரது மகனும், எம்.பி., யுமான கார்த்தி உள்ளிட்டோர் நேரில் ஆஜராக நீதிமன்றம் 'சம்மன்' அனுப்பி உள்ளது.

மூத்த காங்கிரஸ் தலைவர் சிதம்பரம் 2006ல் மத்திய நிதி அமைச்சராக இருந்தார். அப்போது ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தத்திற்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அன்னிய முதலீட்டு வாரியம் அனுமதி அளித்தது.இதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி சிதம்பரம், அவரது மகனும், லோக்சபா எம்.பி.,யுமான கார்த்தி, முன்னாள் மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது டில்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் சிதம்பரம், கார்த்தி உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் அடுத்த மாதம் 20ம் தேதி நேரில் ஆஜராக 'சம்மன்' அனுப்பும்படி நீதிபதி எம்.கே.நாக்பால் நேற்று உத்தரவிட்டார்.

தலைப்புச்செய்திகள்