Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கே மது விற்பனை: அமைச்சர் அறிவிப்பு

நவம்பர் 29, 2021 10:58

சென்னை: தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் தான், டாஸ்மாக்கில் மது விற்பனை செய்யப்படும்,'' என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை அடையாறில் நடந்த மெகா தடுப்பூசி முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது:தமிழகத்தில் 78 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போட வேண்டிய நிலையில், 12வது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதுவரை 77.33 சதவீதம் பேர் முதல் தவணை; 42 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியை போட்டுள்ளனர். பொதுவெளியில் கலந்து கொள்வோர் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற அறிவிப்பு உள்ளது. இது, மதுபான கூடங்களுக்கும், டாஸ்மாக் கடைகளுக்கும் பொருந்தும்.

எனவே, டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்கள் வாங்க வருவோர் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே மது வகைகள் விற்கப்படும். இதை கண்காணிக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.

தலைப்புச்செய்திகள்