Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிறுமி பலாத்கார வழக்கு: ஒரே நாளில் தீர்ப்பு வழங்கி கோர்ட் அதிரடி

நவம்பர் 29, 2021 11:02

அராரியா-பீஹாரில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கை ஒரே நாளில் விசாரித்து, வாலிபருக்கு ஆயுள் முழுதும் சிறை தண்டனை விதித்து 'போக்சோ' நீதிமன்றம் சாதனை படைத்துள்ளது.

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலனா ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.குற்றசாட்டுஅராரியா மாவட்டத்தில் திலிப் குமார் யாதவ், 30, என்பவர் ஜூலை 22ல் அருகில் வசிக்கும், 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.வீட்டில் இருந்த சிறுமியின், 9 வயது சகோதரன் இதனை தடுத்துள்ளார். இதனால் சிறுவன் தாக்கப்பட்டார். போலீசார் 'போக்சோ' உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து திலிப் குமாரை கைது செய்தனர்.

அராரியா போக்சோ நீதிமன்றத்தில் தாக்கலான குற்றப்பத்திரிகை மீது ஆகஸ்ட் 8ல் விசாரணை நடந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட சிறுமி, சகோதரன், பெற்றோர் உள்ளிட்டோர் சாட்சியம் அளித்தனர். மருத்துவ பரிசோதனை அறிக்கை ஆய்வு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பிலான வழக்கறிஞர்களின் வாதம், எதிர்வாதம் உடன டியாக நடத்தி முடிக்கப் பட்டது. அவற்றின் வாயிலாக திலிப் குமார் மீதான குற்றசாட்டு உறுதியானது.

இதையடுத்து அவருக்கு ஆயுள் காலம் முழுதும் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சஷிகாந்த் ராய் தீர்ப்பளித்தார்.சிறுமிக்கு அரசு தரப்பில் ௭ லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டது.''நாட்டில் இதுவரை எந்த ஒரு குற்ற வழக்கிலும் ஒரே நாளில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டதில்லை. ''சிறுமி மீதான பாலியல் வழக்கில் அராரியா நீதிமன்றம் ஒரே நாளில் விசாரித்து தீர்ப்பு அளித்து சாதனை படைத்துள்ளது,'' என அரசு வழக்கறிஞர் ஷியாம்லால் யாதவ் கூறி உள்ளார்.வழக்கு விசாரணை ஒரே நாளில் நடத்தி தண்டனை அறிவிக்கப்பட்டாலும், அதற்கான உத்தரவு நீதிமன்றத்தில் இருந்து 26ம் தேதி வெளியானது.

தலைப்புச்செய்திகள்