Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோட்டக் மகிந்திரா வங்கி பங்குகளை வாங்கும் எல்.ஐ.சி., நிறுவனம்

நவம்பர் 30, 2021 10:59

புதுடெல்லி : நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., தன் வசமுள்ள தனியார் வங்கி துறையைச் சேர்ந்த 'கோட்டக் மகிந்திரா வங்கி'யின் பங்குகளின் எண்ணிக்கையை, கிட்டத்தட்ட 10 சதவீதமாக அதிகரித்துக் கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி, கோட்டக் மகிந்திரா வங்கியின் 4.96 சதவீத பங்குகள், எல்.ஐ.சி., வசம் உள்ளன.இந்நிலையில், இதை 9.99 சதவீதமாக அதிகரித்துக் கொள்ள எல்.ஐ.சி., நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி உள்ளது. இந்த அனுமதி ஓராண்டு வரை செல்லுபடியாகும்.

தனியார் துறை வங்கிகளில் எல்.ஐ.சி., முதலீடு செய்ய வேண்டும் என கருதினால், அதற்கு முன்னதாக, ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியை பெற்றாக வேண்டும். மேலும், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி'யும் ஏற்க வேண்டும்.

இதையடுத்தே, தற்போது ரிசர்வ் வங்கியின் அனுமதியை பெற்றுவிட்டதாக எல்.ஐ.சி., தெரிவித்துள்ளது. எல்.ஐ.சி., பங்குச் சந்தைகளில் பங்குகளில் முதலீடு செய்வதன் வாயிலாகவும், பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாயை, ஒவ்வொரு ஆண்டும் ஈட்டி வருகிறது.

தலைப்புச்செய்திகள்