Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தென் ஆப்பிரிக்காவில் இருந்து மும்பை வந்த 6 பேருக்கு கொரோனா

டிசம்பர் 01, 2021 05:34

மும்பை: சவுதி அரேபியா, போஸ்வானா, பிரேசில், வங்காளதேசம், ஹாங்காங், இஸ்ரேல் உள்பட பல நாடுகளில் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து உலக நாடுகள் அனைத்தும் இந்த நோய் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தியாவிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியா வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் மும்பை கல்யாண், டோம்புவிலி, மீராபயந்தர், புனே ஆகிய பகுதிகளை சேர்ந்த 6 பேர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து மும்பை திரும்பினார்கள்.

பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் வீடுகளில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவில்தான் 6 பேருக்கு கொரோனாவா அல்லது ஒமிக்ரான் தொற்றா என்பது தெரியவரும்.

தலைப்புச்செய்திகள்