Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேசிய கீதத்திற்கு அவமதிப்பு : மம்தா பானர்ஜி மீது பாஜக போலீசில் புகார்

டிசம்பர் 02, 2021 12:29

மும்பை: திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி  இரண்டு நாட்கள் பயணமாக மகாராஷ்டிரா சென்றுள்ளார். பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்து வருவதை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள மம்தா முழு முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும், மத்தியில் ஆளும் பா.ஜ.க கூட்டணி கட்சிகளுக்கு எதிராக எதிர்கட்சிகளை இணைத்து கூட்டணி அமைக்க இருப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி இப்போதைக்கு இல்லை என்று மம்தா திட்டவட்டமாக  தெரிவித்துள்ளார். இந்நிலையில், மும்பையில் செய்தியாளர் சந்திப்பின்போது, மம்தா பானர்ஜி அமர்ந்தபடி தேசிய கீதம் பாடியதாகவும், பின்னர் எழுந்து நின்று பாடலை பாடாமல் பாதியில் நிறுத்திவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய கீதத்தை அவமதித்ததற்காக மம்தா பானர்ஜி மீது மும்பை பா.ஜ.க தலைவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அம்மாநில பாஜக தலைவர் அமித் மாளவியா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், "நமது தேசிய கீதம் நம் தேசத்தின் அடையாளம். பொது பதவியில் இருப்பவர்களால் அதை இழிவுப்படுத்த முடியாது" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல், மேற்கு வங்க பா.ஜ.க தலைவர், பா.ஜ.க நிர்வாகிகள் உள்ளிட்டோர் மம்தா பானர்ஜியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்