Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாய்கள் போல தூங்கும் காவல்துறை: அமைச்சர் பரபரப்பு பேச்சு

டிசம்பர் 05, 2021 10:43

ஷிமோகா: கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அராகா ஜனந்திரா தற்போது கர்நாடக மாநில போலீசாரை நாய்கள்போல தூங்குங்கள் என்று கூறியது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமத்தில் அடிக்கடி பசுக்கள், காளைகள், ஆடுகள் உள்ளிட்ட வளர்ப்பு விலங்குகள் திருடர்களால் கடத்தப்படுகின்றன.
இதனைத்தடுக்க அந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் பலர் காவல் துறையில் புகார் அளித்திருந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் விலங்கு நல ஆர்வலர்கள் சிலர் வேன்களில் ஏற்றப்பட்ட பசுக்களை காக்க அவர்களது வாகனத்தின் கடத்தல்காரர்களின் வாகனத்தின் முன் நின்று வழிமறித்தனர்.

இதனை மதிக்காத கடத்தல்காரர்கள் வனவிலங்கு ஆர்வலர்கள் தடுப்பதை பொருட்படுத்தாமல் வேகமாக அவர்கள்மீது மோதுவது போல வாகனத்தை செலுத்தி தப்பிச்சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. இதனை அடுத்து ஷிமோகா மாவட்டத்தைச் சேர்ந்த கர்நாடக உள்துறை அமைச்சர் அராகா ஜனந்திரா கொதிப்படைந்தார்.

இதுகுறித்து அவர் தொலைபேசி வாயிலாக உரையாற்றிய ஒரு ஆடியோ இணையத்தில் வைரல் ஆகியது. கர்நாடக காவல் துறை தாங்கள் பெறும் சம்பளப் பணத்தை தாண்டி கையூட்டு பெற நினைக்கின்றனர்.

இதன்காரணமாக விலங்கு கடத்தல்காரர்களிடம் கையூட்டு பெற்று அவர்களது சட்டவிரோத செயலுக்கு துணை புரிகின்றனர். எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறை துறையினர் நாய்கள்போல உறங்கி வருகின்றனர் என்று கன்னடத்தில் பேசும் இந்த ஆடியோ பெரும் விவாதத்துக்கு உள்ளாகியது.

இதனை அடுத்து அமைச்சர் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். கையூட்டு பெரும் காவலர்களை மட்டுமே தான் நாய்கள் என்று விமர்சித்ததாகவும் நேர்மையான காவல் அதிகாரிகளை விமர்சிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்