Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சமூக வலைதளங்களை பயன்படுத்தவில்லை: சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பிடித்த ஹன்சிகா

மே 02, 2019 12:56

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 31 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி முடிந்தது. தேர்வு முடிந்த ஒரு மாதத்தில் ரிசல்ட்  வெளியிடப்பட்டுள்ளது. இதில் 83.4% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவிகள் ஹன்சிகா சுக்லா, கரிஷ்மா அரோரா 500க்கு 499 மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். மூன்று பேர் 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடம்பெற்றுள்ளனர்.

எப்போதும் போல மாணவர்களைவிட மாணவிகளே தேர்ச்சி விகிதத்தில் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 79.4% ஆகும்,  மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 88.70% ஆகும். தேர்வில் தேர்ச்சி பெற்ற 10 லட்சம் மாணவர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

முதலிடம் பிடித்த மாணவி ஹன்சிகா சுக்லா பேசுகையில், சமூக வலைதளங்களை பயன்படுத்தவில்லை, அனைத்து பாடங்களிலும் கவனம் செலுத்தினேன் எனக் கூறியுள்ளார். பெற்றோர்கள் உறுதுணையாக இருந்தனர் என கூறியுள்ள மாணவி ஹன்சிகா, பொதுபோக்கு என்றால் மியூசிக் கேட்பேன், விளையாட்டு போட்டிகளை பார்ப்பேன். சமூக வலைதளத்தை பயன்படுத்துவது கிடையாது. பேட்மிண்டன் விளையாட பிடிக்கும் எனக் கூறியுள்ளார். 

வரலாறு, பொலிட்டிகல் சயின்ஸ் (அரசியல் அறிவியல்), உளவியல் மற்றும்  ஹிந்துஸ்தானி இசையில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ள  ஹன்சிகா, ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்