Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை: சுகாதாரத்துறை எச்சரிக்கை

டிசம்பர் 05, 2021 11:41

புதுச்சேரி: புதுச்சேரியில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவது கட்டாயம், இல்லையெனில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அச்சம் காரணமாக முதலில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் மிகப்பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.

2-வது அலையால் பயந்துபோன மக்கள் அவசர அவசரமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டார்கள். 2-வது அலை கட்டுக்குள் வர மீண்டும் ஆர்வம் குறைந்தது.

தற்போது ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்த உருமாற்றம் வைரஸை தடுப்பூசியால் மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியாது என வல்லுனர்கள் தெரிவித்து வருகிறார்கள். இதனால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 3-வது அலையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

இதனால் ஒவ்வொரு மாநிலங்களும் தடுப்பூசி செலுத்தும் பணியை மிக வேமாக துரிதப்படுத்தியுள்ளது. அந்த வகையில் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில்  தடுப்பூசி செலுத்திக் கொள்ளவது கட்டாயம் என அம்மாநில சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

தலைப்புச்செய்திகள்