Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாத்தியமற்றதை சாத்தியம் ஆக்குபவர் பிரதமர் மோடி: யோகி ஆதித்யநாத் பெருமிதம்

டிசம்பர் 06, 2021 12:07

கோரக்பூர்: கிழக்கு உத்தரபிரதேசத்துக்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்ட உரத்தொழிற்சாலை, எய்ம்ஸ் ஆஸ்பத்திரி, உயர் தொழில்நுட்ப ஆய்வகம் ஆகியவற்றை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

 பிரதமர் மோடி 7-ந் தேதி கோரக்பூருக்கு வருகிறார். கிழக்கு உத்தரபிரதேசத்துக்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்ட உரத்தொழிற்சாலை, எய்ம்ஸ் ஆஸ்பத்திரி, உயர் தொழில்நுட்ப ஆய்வகம் ஆகியவற்றை தொடங்கி வைக்கிறார்.

உரத்தொழிற்சாலை கடந்த 1990-ம் ஆண்டு மூடப்பட்டது. அதை திறப்பதாக எதிர்க்கட்சிகள் வாக்குறுதிகள் அளித்தன. ஆனால் எதுவும் செய்யவில்லை. இதை வாக்குவங்கியாக கருதின. அவர்களுக்கு சாத்தியமற்றதை மோடி சாத்தியம் ஆக்கி இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்