Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும்: அமித்ஷா உறுதி

டிசம்பர் 06, 2021 12:22

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை மந்திரி அமித்ஷா, இரண்டாவது நாளாக நேற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ராஜஸ்தான் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள ஜெய்சால்மர் நகரில் ரோகிடாஷ் பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் முகாம் அமைந்துள்ளது.  இந்த முகாமுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் சென்று அவர்களை சந்தித்துப்பேசினார். அதன்பின் வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவு சாப்பிட்டார்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநில கட்சி நிர்வாகிகளுடன் அமித்ஷா கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

ராஜஸ்தான் மாநிலத்தில் 2023ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை ராஜஸ்தானில் மீண்டும் தாமரை மலரும்.

இங்கு ஆட்சி செய்து வரும் பயனற்ற மற்றும் ஊழல் கறைபடிந்த அசோக் கெலாட்டின் காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். வரும் சட்டசபை தேர்தலில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பெற்று பாஜக ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.  

தலைப்புச்செய்திகள்