Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடத்தல் தங்கம் மாயம்- சுங்க அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்டு

டிசம்பர் 07, 2021 11:53

திருவனந்தபுரம்: வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு வரும் விமானங்களில் அடிக்கடி தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் நடைபெறும். இதனை கண்காணிக்க அனைத்து விமான நிலையங்களிலும் சுங்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

விமான நிலையங்களில் பறிமுதல் செய்யப்படும் தங்கம், சுங்க அதிகாரிகள் பாதுகாப்பில் இருக்கும். சமீபத்தில் பயணி ஒருவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அதில் ஒரு கிலோ தங்கம் மாயமாகி இருந்தது.

இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி சுங்க அதிகாரிகள் 3 பேரை சஸ்பெண்டு செய்தனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
 

தலைப்புச்செய்திகள்