Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேலைவாய்ப்பு தகவல்களை தெரிந்து கொள்ள செல்போன் செயலி அறிமுகம்

டிசம்பர் 07, 2021 11:53

திருப்பூர்: பள்ளி கல்வித்துறை இயக்ககம் சார்பில் போட்டித்தேர்வு மற்றும் வேலைவாய்ப்பு செய்தி குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள ‘உங்கள் நூலகம் உள்ளங்கையில்’ என்ற ‘செல்போன்   செயலி’ உருவாக்கப்பட்டுள்ளது. இதனை செல்போன் ‘பிளே ஸ்டோரில்’ சென்று ‘டவுன்லோடு’ செய்து கொள்ளலாம்.  இதுகுறித்து திருப்பூர் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

5-ம்வகுப்பு தேர்ச்சி முதல் பி.எச்.டி., வரை பொறியியல், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் உட்பட 147க்கும் அதிகமான படிப்புகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த தகவல் இடம் பெற்றுள்ளது. ஒருமுறை விபரங்களை பதிவு செய்தவருக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு தகவல் ‘நோட்டிபிகேஷனாக’ அனுப்பி வைக்கப்படுகிறது.

போட்டி தேர்வு, வேலைவாய்ப்பு குறித்த அதிகாரப்பூர்வ, சமீபத்திய தகவல்களை இந்த செயலியில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம். இதனை பள்ளி கல்வித்துறை, பொது நூலகத்துறை இணைந்து ஒருங்கிணைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தலைப்புச்செய்திகள்