Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெங்கு காய்ச்சல் வராமல் இருக்க கொசுவை வளர்த்து மக்களை கடிக்க விடும் அரசாங்கம்

மே 03, 2019 07:38

கொசுக்கள் மூலம் பரவும் ஆபத்தான நோய்களில் ஒன்று டெங்கு. ஆண்டுதோறும் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களை தாக்கும் இந்த டெங்கு காய்ச்சல் ஆபத்தான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. எனவே டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்கு உலகம் முழுவதும் உள்ள நாடுகள் கொசுக்களை அழித்து வருகின்றன. ஆனால் தென் அமெரிக்க நாடான கொலம்பியா மட்டும் வித்தியாசமாக சிந்தித்து புது வித முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

கொசுவால் ஏற்படும் இந்த காய்ச்சலை கொசுவை வைத்து கட்டுப்படுத்துவதே அந்த வித்தியாசமான முயற்சி. தனியாக சோதனை கூடங்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் லட்சக்கணக்கான கொசுக்கள் வளர்க்கப்படுகின்றன. அப்படி வளர்க்கப்பட்ட கொசுக்களின் டெங்கு மற்றும் மற்ற கிருமிகள் பரவாமல் தடுக்கும் வொல்பேசியா எனும் நன்மை செய்யும் பாக்டீரியா செலுத்தப்படும்.

இப்படி பாக்டீரியா செலுத்தப்பட்ட கொசுக்கள் அந்நாட்டின் தெருக்களில் விடப்படுகின்றன. இதுபற்றி அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, "பாக்டீரியா செலுத்தப்பட்ட கொசுக்கள் மக்களை கடிக்கும் போது தானாகவே டெங்கு காய்ச்சல் தடுப்பு மருந்து ரத்த நாளங்கள் வழியாக மக்கள் உடலில் செல்கின்றன. இது மக்களை ஒரு இடத்திற்கு அழைத்து ஊசி போடும் நடைமுறையை விட எளிமையானது. இந்த முறை தான் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளிலும் பயன்படுத்தப்படுகிறது" என தெரிவித்தார்.   

தலைப்புச்செய்திகள்