Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குன்னூரில் முப்படை தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து; 11 பேர் பலி

டிசம்பர் 08, 2021 03:39

நீலகிரி: நீலகிரி அருகே முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது குடும்பத்தினருடன் பயணித்த ஹெலிகாப்டர் மலைமுகட்டில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 விமானப் படை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். 

நீலகிரியில் பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணித்தனர். பனி மூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் மலைமுகட்டில் மோதி விபத்தில் சிக்கியது. ஊட்டியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் காட்டேரி மலை முகட்டில் மஞ்சப்பா சத்திரம் பகுதியில் விபத்து முற்பகல் 11.20 மணிக்கு விபத்து நிகழ்ந்தது. ஒன்றரை மணிநேரமாக ஹெலிகாப்டர் தீ பிடித்து எரிந்தது. 

விபத்து நடந்த இடத்தில் 4 பேரின் உடல்கள் முற்றிலும் எரிந்த நிலையில் மீட்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டன. தற்போதைய நிலையில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் விரைந்துள்ளார். கோவையில் இருந்து 6 பேர் கொண்ட மருத்துவர் குழுவும் குன்னூர் விரைந்துள்ளது. இந்த குழுவில் தீக்காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வல்லுநர்கள் இடம் பெற்றுள்ளனர். 

வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள வனப் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. நீலகிரியில் ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த இடத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை செல்கிறார். இதனிடையே இந்த விபத்து தொடர்பாக விமானப் படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்