Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிபின் ராவத் மறைவுக்கு தலாய் லாமா இரங்கல்

டிசம்பர் 09, 2021 02:55

தர்மசாலா: முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மறைவுக்கு திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழகம், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

 இவர்களது மறைவுக்கு உலகம் முழுவதிலிருந்தும் இரங்கல் செய்தி வந்துக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா பிபின் ராவத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் சக அதிகாரிகளுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.

இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் இறந்த அனைவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசத்தின் சேவையில் தளபதி ராவத்தின் நீண்டகால பங்களிப்பை நான் வணங்குகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

தலைப்புச்செய்திகள்