Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சூலூரில் இருந்து 13 பேர் உடல்களுடன் டெல்லி கிளம்பிய சி130 சூப்பர் ஹெர்குலிஸ் விமானம்

டிசம்பர் 09, 2021 04:44

குன்னுார்: குன்னுார் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் முப்படை ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் கோவை சூலுாரில் உள்ள விமானப்படை தளத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து உடல்களுடன் சி130 சூப்பர் ஹெர்குலிஸ் என்ற தனி விமானம் டில்லி புறப்பட்டு சென்றது.

கோவை சூலுாரில் இருந்து நேற்று காலை வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்துக்கு கிளம்பிய ஹெலிகாப்டர் காட்டேரி என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது. இதில், முப்படை ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி, பிபின் ராவத் உதவியாளர், பாதுகாப்பு கமாண்டோக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த விமானிக்கு பெங்களூருவில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

குன்னுார் வெலிங்கடன் ராணுவ பயிற்சி மையத்தில் வைக்கப்பட்ட இவர்களது உடலுக்கு தமிழக முதல் ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் இவர்கள் உடல்கள் இன்று (டிச.,9) மதியம் 12.30 மணிக்கு 13 தனித்தனி ஆம்புலன்ஸ்கள் மூலம் சாலை மார்க்கமாக சுமார் 85 கிலோ மீட்டர் துாரமுள்ள சூலுார் விமானப்படை தளத்துக்கு கொண்டு சென்றனர். வழிநெடுகிலும் பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மீது மலர்கள் துாவி அஞ்சலி செலுத்தினர்.

13 பேரின் உடல்களுடன் சூலுாரிலிருந்து சி130 சூப்பர் ஹெர்குலிஸ் என்ற தனி விமானம் டெல்லி புறப்பட்டு சென்றது.

தலைப்புச்செய்திகள்