Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆளில்லா 2 விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டம்: மத்திய அமைச்சர் தகவல்

டிசம்பர் 10, 2021 10:23

புதுடெல்லி: 'சுகன்யான்' திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன், விண்வெளிக்கு இரண்டு ஆளில்லா விண்கலங்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது என, ராஜ்யசபாவில் விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

ராஜ்யசபாவில் விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது: கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்தியாவின் விண்வெளி திட்டங்கள் தாமதமாகி உள்ளன. நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, 'ககன்யான்' திட்டத்தின் கீழ், 2022ல் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதனால், 2022 இறுதியில் அல்லது 2023ல், ககன்யான் திட்டத்தில் மூன்று பேர், விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படுவர்.அதற்கு முன், இரண்டு ஆளில்லா விண்கலங்கள், விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதில், 'வாயுமித்ரா' என்ற பெயரில், இரண்டு ரோபோக்கள் அனுப்பி வைக்கப்படும். வியாழன் திட்டத்தை அடுத்த ஆண்டிலும், ஆதித்யா திட்டம் எனப்படும் சூரிய திட்டத்தை, 2029லும் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தியா சார்பில், 2030ல் விண்வெளி மையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


 

தலைப்புச்செய்திகள்