Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்திய அரசின் உரங்கள் மற்றும் ரசாயன தொழிற்சாலையில் வேலை

மே 03, 2019 07:50

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் "THE FERTILIZERS AND CHEMICALS TRAVANCORE LTD" நிறுவனத்தில் 44 பதவி காலி பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை வெளியீட்டுள்ளது . 

இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வி தகுதி : B.E, B.TECH, M.E, M.TECH ஆகும் . இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது .

இதற்கான இணையதள முகவரி : www.fact.co.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் . மேலும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம் (OBC/GENERAL) : ரூபாய் 1000, (SC/ST) : ரூபாய் 500 இணையதள வழியில் (NET BANKING, CREDIT CARD, DEBIT CARD)  செலுத்த வேண்டும் . அதே போல் ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கும் நாள் : 06/05/2019 , விண்ணப்பிக்க கடைசி நாள் : 20/05/2019 . இந்த நிறுவனம் ஆனது கேரளா மாநிலத்தில் இயங்கி வருகிறது .அதனைத் தொடர்ந்து தேர்வு தேதி மற்றும் விண்ணப்பங்கள் தொடர்பான நிலையை இதே இணைய தளத்தில் அறியலாம் .இந்த பணியிடங்கள் தொடர்பான முழு விவரங்களுக்கு www.fact.co.in என்ற இணைய தளத்தை அணுகவும்.

தலைப்புச்செய்திகள்