Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பி.எஸ்.எப். அதிகார எல்லையை மீறவிடாமல் தடுத்திட வேண்டும்: மாநில போலீசாருக்கு மம்தா உத்தரவு

டிசம்பர் 10, 2021 10:45

புதுடெல்லி: எல்லை பாதுகாப்புபடையினர் அதிகார எல்லையை மீறவிடாமல் தடுத்திட வேண்டும் மாநில போலீசாருக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா - வங்கதேச எல்லை மாநிலங்களான மே.வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சர்வதேச எல்லையில் இருந்து 15 கி.மீ., தொலைவு வரை எல்லை பாதுகாப்புபடையினர் சோதனை செய்யும் அதிகாரம் 50 கி.மீ., ஆக நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த அக்டோபரில் வெளியிட்டது.

மத்திய அரசின் இந்த முடிவிற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக கடந்த நவம்பர் 24ல் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து முறையிட்டார்.

இந்நிலையில் முதல்வர் மம்தா மாநில காவல்துறை டி.ஜி.பி.க்கு பிறப்பித்த உத்தரவில், இந்திய, வங்க தேச எல்லை பகுதியான கரீம்பூர் மாவட்டத்தில் பி.எஸ்.எப். படையினருக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட 15 கி.மீ. தொலைவு வரை உள்ள அதிகார எல்லைக்குள் அவர்களது கடமையை செய்யட்டும். அதற்கு மாறாக அதிகார எல்லையை மீறிடாமல் தடுத்திட வேண்டும். இவ்வாறு உத்தரவில் மம்தா தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்