Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரளாவில் மீண்டும் பரவிய பறவை காய்ச்சல்: 13 ஆயிரம் வாத்துகள் பலி

டிசம்பர் 10, 2021 11:20

திருவனந்தபுரம்: ஆலப்புழா பகுதிகளில் உள்ள நீர் நிலைகளுக்கு வரும் பறவைகளை கண்காணிக்கவும் வனத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் வாத்து, கோழி உள்ளிட்ட பறவைகளை மக்கள் வளர்த்து வருகிறார்கள்.

இப்பறவைகளுக்கு அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டு அவை உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்தன. சமீபத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துக்கள் உயிரிழந்தன.

இது தொடர்பாக கால்நடை துறை அதிகாரிகள் மற்றும் டாக்டர்கள் ஆலப்புழா பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர். இறந்து போன பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் பறவை காய்ச்சல்  இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ஆலப்புழா மாவட்ட கலெக்டர் அலெக்சாண்டர், பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார். மேலும் நோய் பாதித்த பறவைகளை உடனடியாக புதைக்கவும் ஏற்பாடு செய்தார்.

பறவை பண்ணைகள் அதிகமாக உள்ள தகழி 10-வது வார்டு பகுதியில் இது தொடர்பான உடனடி நடவடிக்கைக்கும் உத்தரவிட்டார்.

மேலும் ஆலப்புழா மாவட்டத்தில் சம்பக்குளம், நெடுமுடி, முட்டார், வியாபுரம், கருவட்டா, திருக்குன்றாபுழா, ஆலப்புழா தெற்கு, வடக்கு பகுதிகள் மற்றும் எடத்துவா, ஹரிப்பாடு பகுதிகளில் வாகனங்கள் செல்வும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதோடு இந்த பகுதிகளில் ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு பொதுமக்கள் யாரும் தேவையின்றி செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இது தவிர ஆலப்புழா பகுதிகளில் உள்ள நீர் நிலைகளுக்கு வரும் பறவைகளை கண்காணிக்கவும் வனத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் இந்த பகுதியில் சுகாதார துறையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்