Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஹெலிகாப்டர் விபத்தின் கடைசி நிமிட வீடியோ எடுத்த சுற்றுலா பயணிகள் யார்?: தனிப்படை போலீஸ் தேடுகிறது

டிசம்பர் 10, 2021 11:25

கோவை: ஹெலிகாப்டர் வானத்தில் பறப்பதையும், பனிமூட்டத்திற்குள் சென்று மறைவதையும், சிறிது நேரத்தில் கீழே விழும் சத்தம் கேட்பதையும் சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து இருந்தனர்.

குன்னூரில் முப்படைகளின் தலைமைத் தளபதி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 13 பேர் உயிரிழந்த நிலையில், விபத்திற்கு சில நொடிகளுக்கு முன்னர் சுற்றுலாப் பயணிகளால் எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகியது.

 இந்த வீடியோவில் முப்படை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் பனி மூட்டத்தால் மலைப்பகுதியில் தாழ்வாக செல்வது இடம்பெற்றது. தொடர்ந்து சிறிது நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் வெடித்து சிதறும் சத்தம் கேட்க, அந்த வீடியோவில் இருக்கும் நபர்கள் “என்னாச்சு உடைஞ்சுருச்சா” என அதிர்ச்சியுடன் கேட்கும் காட்சிகளும் பதிவாகியது.

இந்த நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. தொடர்ந்து இந்த வீடியோவை எடுத்த சுற்றுலா பயணிகள் யார் என்பது குறித்தும், இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய தற்போது தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த வீடியோ எடுத்த சுற்றுலா பயணிகளை பிடித்து விசாரணை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்