Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் 8,503 பேருக்கு கொரோனா தொற்று

டிசம்பர் 10, 2021 11:30

புதுடெல்லி: கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 7,678 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 41 லட்சத்து 5 ஆயிரத்து 66 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,503 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.

 இதில் அதிகபட்சமாக கேரளாவில் 4,169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 3 கோடியே 46 லட்சத்து 74 ஆயிரத்து 744 ஆக உயர்ந்தது.

சில மாநிலங்களில் விடுபட்டிருந்த கொரோனா மரணங்கள் தற்போது பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சண்டிகரில் 256, கேரளாவில் 225 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 624 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,74,735 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 7,678 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 41 லட்சத்து 5 ஆயிரத்து 66 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி 94,943 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் நேற்று 74,57,970 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 131 கோடியே 18 லட்சத்தை கடந்துள்ளது.

இதற்கிடையே நேற்று 12,93,412 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுவரை 65.32 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்