Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆப்கானிஸ்தானுக்கு மருத்துவ பொருள்களை அனுப்பியது இந்தியா

டிசம்பர் 12, 2021 11:03

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றி நடத்தி வருகின்றனர். அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசை இதுவரை எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. கடும் நிதி மற்றும் உணவு பொருட்கள் நெருக்கடியில் சிக்கி ஆப்கன் தவிக்கிறது. 

இதற்கிடையே, ஆப்கன் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் உதவிகள் வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. பாகிஸ்தான் வழியாக 50 ஆயிரம் டன் கோதுமையை லாரிகள் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கான நடைமுறைகளை இந்தியாவும், பாகிஸ்தானும் ஆலோசித்து வருகின்றன.

இந்நிலையில், மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை மனிதநேய அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு விமானம் வாயிலாக இந்தியா நேற்று அனுப்பி வைத்தது. இவை ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தலைப்புச்செய்திகள்