Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை சோதனை வெற்றி

டிசம்பர் 12, 2021 11:04

புதுடெல்லி: இந்திய ராணுவத்துக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டி.ஆர்.டி.ஓ.) தொழில்நுட்ப உதவியுடன் தனியார் நிறுவனத்தில் பினாகா ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பினாகா ஏவுகணைகள் 40 கி.மீ. முதல் பல்வேறு தூர அளவுகளில் உள்ள இலக்குகளை சென்று தாக்கும் திறன் கொண்டவை.

இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை துல்லியமாக இலக்கை தாக்கின என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாக்குதல் தூரம் அதிகரிக்கப்பட்ட பினாகா ஏவுகணைகளின் சோதனை ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நடைபெற்றது.

பல்வேறு தூர அளவுகளுக்குச் செல்லும் வேறுபட்ட தாக்குதல் திறன் கொண்ட 24 பினாகா ராக்கெட்டுகள் கடந்த 3 நாட்களில் பரிசோதிக்கப்பட்டன. அவை துல்லியமாக இலக்குகளைத் தாக்கின என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்