Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெண்களின் திருமண வயது 21ஆக உயர்வு: மத்திய அரசு ஒப்புதல்

டிசம்பர் 16, 2021 02:49

புதுடெல்லி: ஆணுக்கு வயது ( 21 ) வரம்பு இருப்பது போல் பெண்ணுக்கும் திருமண வயது 21 ஆகிறது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது. பெண்ணுக்கு இனி சட்டப்படி 18 வயதில் திருமணம் செய்ய இயலாது. விரைவில் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டு பார்லி.,யில் நிறைவேற்றப்படும்.

1995 ஹிந்து திருமண சட்டத்தின்படி சில மாற்றங்களை செய்ய மோடி தலைமையிலான மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. சிறப்பு திருமண சட்டம் , சிறுமிகள் திருமண தடுப்பு சட்டத்தில் மாற்றங்கள் வரவுள்ளன. இது தொடர்பாக ஜெயாஜெட்லி தலைமையிலான நிதிஆயோக் குழு சில பரிந்துரைகளையும் செய்திருந்தது.

பெண்கள் திருமணம் 21 வயதாகும் போது அவர்களின் நலன் காக்கப்படும். பிறக்கும் குழந்தைகளுக்கும், சமூகத்திற்கும், மிக ஆரோக்கியமானதாக இருக்கும் என்றும் பரிந்துரையில் சில அம்சங்கள் எடுத்து காட்டப்பட்டன.

மேலும் சமீபத்திய சுதந்திரதின உரையில் பிரதமர் மோடி உரையாற்றுகையில்; " நமது மகள்கள், சகோதரிகள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். பெண்களை ஊட்டச்சத்து குறைபாடு நலன் காத்திட திருமண வயதில் மாற்றம் கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது. " என கூறியிருந்தார்.

இந்நிலையில் பெண்கள் திருமண வயது 21 என்ற மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்