Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து எழுச்சி மாநாடு: கிருஷ்ணசாமி தகவல்

டிசம்பர் 17, 2021 11:59

விருதுநகர்: "ஸ்ரீவில்லிபுத்துாரில் 2022 மார்ச் 9ல் இந்துக்கள் எழுச்சி, ஒருங்கிணைப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.

விருதுநகரில் அவர் கூறியதாவது: புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழா துவக்க மாவட்ட மாநாடு உலக இந்துக்கள் எழுச்சி மாநாடாக தென்காசியில் நடந்தது. அடுத்ததாக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மாநாடு இந்துக்கள் எழுச்சி, ஒருங்கிணைப்பு மாநாடாக நடத்தப்பட உள்ளது.

2022 மார்ச் 9ல் ஸ்ரீவில்லிபுத்துாரில் நடக்க உள்ளது. இதில் இந்திய அளவில் உள்ள ஆன்மிக தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா எண்ணிக்கையில் இந்துக்களை பெரும்பான்மையாக கொண்டிருந்தாலும் கூட குறிப்பாக தமிழகத்தில் இந்துக்கள் என்று சொல்வதற்கே இந்துக்கள் கூச்சப்படுகின்றனர். இந்த சூழலை மாற்றி அமைத்து இந்துக்கள் என தலைநிமிர்ந்து சொல்ல வேண்டும். அதன் மூலம் இந்திய தேசத்தின் அடையாளம் பிரதிபலிக்கப்பட வேண்டும்.

இந்துக்கள் இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் நீங்கி சமுக நல்லிணக்கம், சமத்துவம் ஏற்பட வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் தீப்பெட்டி, பட்டாசு தொழில்கள் சுயமாக வளர்ந்தவை. மாசில்லா பட்டாசு குறித்து மத்திய அரசு தெளிவான விளக்கம் தரவில்லை.

தீபாவளி நேரத்தில் உற்பத்தியாளர்கள் பாதிப்பை சந்திக்கின்றனர். பெண்கள் மீதான வன்கொடுமைகள் சமுக ரீதியான அடிப்படை பிரச்னை ஆகும். இதை பள்ளிகளில் இருந்தே ஒழுங்குப்படுத்த வேண்டும். தமிழக மாணவர்களுக்கு மொழியில் பிரச்னை இல்லை. கல்வியில் தான் பிரச்னை. தமிழகத்தில் மொழியை வைத்தே பிழைப்பு நடத்துகின்றனர். பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு ரூ.10 குறைத்துள்ளது. மாநில அரசும் அதே போல் ரூ.10 குறைக்க வேண்டும், என்றார்.

தலைப்புச்செய்திகள்