Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வடமாநிலங்களில் மைனஸ் டிகிரியை தொட்ட வெப்பநிலை: கடுங்குளிரால் மக்கள் அவதி

டிசம்பர் 19, 2021 10:17

ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகார், டெல்லி, உத்தர பிரதேசதங்களில் வெப்பநிலை மைனஸ் டிகிரியை தொட்டதால் கடுங்குளிர் நிலவி வருகிறது. தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையில் இந்தியாவின் வடக்கு, விடகிழக்கு மாநிலங்களில் குளிர்காலம் தொடங்கியுள்ளது. உத்தர பிரதேசம், டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேச மாநிலங்களில் விடியற்காலை கடுமையான குளிர் நிலவி வருகிறது. மேலும், பனிமூட்டம் காரணமாக மக்கள் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பநிலை மைனஸ் டிகிரியை தொட்டதால் மக்கள் கடுங்குளிரால் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மேற்கு ராஜஸ்தான் மாநிலம் சுரு என்ற இடத்தில் நேற்று -1.1 டிகிரியாக வெப்பநிலை குறைந்து பதிவாகியுள்ளது. இமாச்சல பிரதேசம், ஹரியானா, சண்டிகார், டெல்லி, மேற்கு உத்தர பிரதேசத்தில் பெரும்பாலான இடங்களில -1.6 டிகிரி முதல் -3.0 டிகிரி வரை பதிவாகியுள்ளது. இத்தகவலை தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்