Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொற்கோவிலில் அத்துமீறி நுழைந்த நபர் அடித்துக்கொலை

டிசம்பர் 19, 2021 10:19

புனித நூல், வைரம் பதித்த வாள் ஆகியவற்றை அவதிக்கும் நோக்கத்தில் நுழைந்ததாக பக்தர்கள் கோபத்தில் உ.பி. நபரை அடித்து கொலை செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோவில் சீக்கியர்களின் புனித ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபட்டு வருகிறார்கள். சீக்கிய குருக்கள் பூஜை செய்வதற்கு தனி இடம் உள்ளது. அதேபோல் அவர்களின் புனித நூல் (குரு கிராந்த் சகிப்) மற்றும் வைரம் பதித்த வாள் ஆகியவையும் கருவறையில் வைக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்திற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இந்த நிலையில் நேற்று உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், திடீரென குருக்கள் பூஜை செய்யும் இடத்திற்குள் குதித்த நபர், புனித நூல் மற்றும் வாள் இரண்டையும் எடுக்க முயன்றார்.

இதனால் அங்கு காவலுக்கு நின்ற கோவில் நிர்வாக பாதுகாவர்கள் அவரை பிடித்து வெளியே கொண்டு வந்தனர். அப்போது கோபம் அடைந்த பக்தர்கள் அந்த நபரை அடித்து உதைத்தனர். இதில் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொற்கோவிலை அவதிக்கும் வகையிலான இந்த செயலுக்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில்,  அசம்பாவிதம் நடைபெறாத வண்ணம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்